2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

​பாகிஸ்​தான் பிரதமருடன் ஈரான் அமைச்​சர் சந்திப்பு

Freelancer   / 2026 ஏப்ரல் 26 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்​கா - ஈரான் பிர​தி​நி​தி​கள் இடையே கடந்த 11, 12 ஆம் திகதி​களில் பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தில் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. இந்த பேச்​சு​வார்த்தை தோல்​வி​யில் முடிந்​தது. எனினும் அமைதி முயற்​சிக்​காக கால​வரை​யின்றி போர் நிறுத்​தம் அமுல் செய்​யப்​படு​வ​தாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறி​வித்து உள்​ளார்.

இந்த சூழலில் ஈரான் வெளி​யுறவு அமைச்​சர் அப்​பாஸ் அராக்சி தலை​மையி​லான குழு நேற்று முன்​தினம் இஸ்​லா​மா​பாத் சென்​றது. அங்கு பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபை ஈரான் அமைச்​சர் அராக்சி நேற்று சந்​தித்​துப் பேசி​னார். இந்த சந்​திப்​பின்​போது பாகிஸ்​தான் வெளி​யுறவு அமைச்​சர் முகமது இஷாக் தார், இராணுவ தளபதி அசிம் முனீர் ஆகியோ​ரும் உடன் இருந்​தனர்.

இதுகுறித்து ஈரான் அரசு வட்​டாரங்​கள் கூறும்​போது, “அமெரிக்கா​வுடன் நேரடி பேச்​சு​வார்த்​தை​யில் பங்​கேற்க மாட்​டோம். எங்​களது கோரிக்​கைகள், நிபந்​தனை​களை பாகிஸ்​தான் தரப்​பிடம் கூறியுள்ளோம். அவர்​கள் அமெரிக்க பிர​தி​நி​தி​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்தி சுமுக தீர்வை காண முயற்சி செய்​வார்​கள்” என்று தெரி​வித்​தன.

இதனிடையே அமெரிக்க அரசின் சிறப்பு தூதர்​கள் ஸ்டீவ் விட்​காப், ஜெராட் குஷ்னர் ஆகியோர் விமானத்​தில் இஸ்​லா​மா​பாத் புறப்​பட்டு இருப்​ப​தாக​ தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

ஈரான் வெளி​யுறவு அமைச்​சர் அப்​பாஸ் அராக்​சி, மஸ்​கட் மற்​றும் ரஷ்​யா​வில் சுற்​றுப் பயணம் செய்து அந்த நாடு​களின் தலை​வர்​களு​டன் முக்​கிய பேச்​சு​வார்த்​தைகளை நடத்​த உள்​ளார்​. அவரது ரஷ்ய பயணம்​ முக்​கியத்​துவம்​ ​வாய்​ந்​த​தாகக்​ கருதப்​படுகிறது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .