Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
J.A. George / 2020 டிசெம்பர் 16 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருப்பவர் நயன்தாரா. திரைப்படத்துக்கு சுமார் ஐந்து கோடி ரூபாய் வரை அவர் சம்பளம் வாங்குவதாக கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
கொரோனா ஊரடங்குக்கு முன்னதாக 'அண்ணாத்த' திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். சுமார் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
ஐதராபாத்தில் நடந்து வரும் படப்பிடிப்பில் 'அண்ணாத்த' திரைப்படத்தின் மொத்த குழுவினரும் கலந்து கொண்டு ஒரு மாதத்தில் திரைப்படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம்.
அதே சமயம் ஐதராபாத்தில் தனது காதலர் இயக்கும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படத்திலும் நயன்தாரா நடிக்கப் போகிறாராம். இரண்டு திரைப்படத்திலும் மாறி மாறி ஒரே சமயத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.
மேலும், காதலர் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் 'நெற்றிக்கண்' திரைப்படத்திலும் நடித்து வருகிறார் நயன்தாரா. இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
19 minute ago
48 minute ago
3 hours ago