Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 மே 31 , மு.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்ணிடம் தகராறு செய்த இளைஞர் கன்னத்தில் நடிகர் சூர்யா பளார் என்று அறைந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யா, கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டு விட்டு நேற்று மாலை திரும்பிக் கொண்டிருந்தார்.
அடையார் திரு.வி.க. மேல்பாலத்தில் வரும்போது ஒரு இளைஞன் ஒரு பெண்ணை மிரட்டும் தொணியில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். எல்லோரும் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால் காரை விட்டு இறங்கிய சூர்யா அவர்களிடம் சென்று விசாரித்துள்ளார். அந்த பெண்ணின் காரில் அந்த இளைஞனின் மோட்டார் சைக்கிள் மோதி இருக்கிறது.
இது தொடர்பாக இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வாக்குவாதம் செய்து கொண்டிருந்துள்ளனர்.
இருவரையும் சூர்யா சமாதானப்படுத்தி அனுப்பி வைக்க முயற்சித்துள்ளார், அப்போது அந்த இளைஞர் சூர்யாவை பார்த்து தகாத வார்த்தைகள் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சூர்யா அந்த இளைஞனின் கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டு காரில் ஏறிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
சென்னையை சேர்ந்த பிரேம்குமார் என்ற அந்த இளைஞர், சூர்யா தன்னை தாக்கவிட்டதாகவும். அவமானம் தாங்காமல் நான் தற்கொலை செய்தால் அதற்கு சூர்யாதான் பொறுப்பு என்றும் சாஸ்திரி நகர் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இது குறித்து சூர்யா தரப்பு என்ன சொல்கிறது?
இதுகுறித்து சூர்யா தரப்பில் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது, "அடையாறிலிருந்து சூர்யா வரும்போது இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தார்கள்.
சைலன்சரை சத்தமாக வைத்து கொண்டு அவர்கள் மற்றவர்களை பயமுறுத்தும் அளவிற்கு சென்று கொண்டிருந்தார்கள்.
ஒரு வயதான அம்மா மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றார்கள். அவர்களை வழிமறித்த சூர்யா அவர்களிடம் 'இப்படி செய்வதால் பலருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. உங்கள் உயிருக்கும் ஆபத்து' என்று அறிவுரை சொன்னார். அவர்கள் அதை ஏற்கவில்லை.
இதனால் பொலிஸாருக்கு அலைபேசியில் தகவல் தெரிவித்து, தனது உதவியாளரை அங்கு நிறுத்திவிட்டு வந்து விட்டார்.
சூர்யா வந்ததும், அவர் மீது அந்த இளைஞர்கள் பொய்யான புகாரை கொடுத்துள்ளனர்'"என்கிறார்கள்.
14 minute ago
18 minute ago
24 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
18 minute ago
24 minute ago
44 minute ago