2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

”உயிர் - உலக்” புகைப்படத்தை பகிர்ந்த விக்னேஷ்

Freelancer   / 2023 செப்டெம்பர் 27 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

திரையுலகின் பிரபலங்களான நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி காதலித்து கடந்த வருடம்  ஒக்டோபர்  9-திகதி திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன என விக்னேஷ் சிவன் டுவிட்டர் பதிவில் வெளியிட்டார்.

தங்கள் இரட்டை குழந்தைகளின் முதல் பிறந்தநாளில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி மகன்களின் முகத்தை ரசிகர்களுக்கு காட்டி புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர்.

அதைத்தொடர்ந்து அவர்கள் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். குழந்தைகளுக்கு ‘உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன்’ என பெயர் சூட்டியிருப்பதாக அறிவித்தனர்.

கடந்த ஒரு வருடமாக பண்டிகை நாட்களில் குழந்தைகளுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை இருவரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். ஆனால் குழந்தைகளின் முகத்தை காட்டாமலேயே புகைப்படங்களைப் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரட்டை குழந்தைகளின் பிறந்த நாளையொட்டி முகம் தெரியும்படியான புகைப்படங்களை பகிர்ந்து நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X