2025 செப்டெம்பர் 06, சனிக்கிழமை

உள்ளாடையை வெளியே அணிந்த பிரபல பெண் பாடகர்

Janu   / 2025 ஜூலை 08 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா உபி மாநிலம் ரிஷிகேசை சேர்ந்த நேகா கக்கர் (வயது 37) என்பவரின் இசை ஆல்பத்தை டி-சீரிஸ், சோனி மியூசிக் இந்தியா, ஜி மியூசிக் கம்பெனி உள்ளிட்ட பிரபல இசை நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

இவர் சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் அவர் உள்ளாடையை வெளியே அணிந்தவாறு உலா வந்துள்ளார். வெள்ளை நிற ஆடையை அணிந்து அதற்கு மேல் நீல நிற உள்ளாடையை அணிந்துள்ளார்.

 இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறதுடன் இதனை பகிர்ந்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தில் 'என்ன இவர் சூப்பர் மேனா, இப்படியா காட்சி கொடுப்பது' என கலாய்த்து வருகின்றனர்.

இது என்ன உடை என ஒருவர் கேட்க அதற்கு பதில் அளித்துள்ள ஒருவர் , நேகா என்றைக்கு அர்த்தமுள்ளதாக நடந்து கொண்டார் என்றும் வினவி உள்ளனர். 'இவர் என்ன செய்கிறார் என்பது அவருக்கு தெரியும், அவர் எதையும் செய்வார், அவர் மேலே அணிந்திருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை' என பலரும் பலவாறு கருத்து தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .