Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 நவம்பர் 11 , பி.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
“என் தாயார் கடந்த 4 ஆண்டுகளாக கோமாவில் இருக்கிறார். அவருக்கு ட்யூப் மூலமாக தான் உணவு கொடுத்து வருகிறோம். அப்பா தான் தாய்க்கு தாயாக இருந்து என்னையும் அம்மாவையும் கவனித்து வருகிறார்” என நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திவ்யா சத்யராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “சிங்களில் பேரன்ட்ஸ்கள் அனைவரையும் பாராட்டும் வகையிலான பதிவு இது. கடந்த 4 ஆண்டுகளாக என்னுடைய தாயார் கோமாவில் இருந்து வருகிறார். வீட்டில் இருக்கும் அவருக்கு உணவு கூட ட்யூப் வழியாக தான் கொடுத்து வருகிறோம். நாங்கள் மனதளவில் உடைந்துவிட்டோம். ஆனால், அம்மா விரைவில் குணமடைந்துவிடுவார் என நேர்மறையான எண்ணத்துடனும், நம்பிக்கையுடனும் காத்திருக்கிறோம்.
அம்மா மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உண்டு. கடந்த 4 ஆண்டுகளாக அப்பாதான் தாய்க்கு தாயாக இருந்து சிங்கிள் பேரன்டாக கவனித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் என் அப்பாவின் அம்மா, என்னுடைய பாட்டி இறந்துவிட்டார். அந்த வகையில் என் அப்பாவுக்கு நானும் ஒரு தாய் போல மாறிவிட்டேன். நானும், அப்பாவும் ஒருவருக்கொருவர் தாயாக மாறி அன்பு செலுத்தி வருகிறோம்” என பதிவிட்டுள்ளார்.
23 minute ago
29 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
29 minute ago
45 minute ago