Shanmugan Murugavel / 2026 மார்ச் 17 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒஸ்கார் விருது வழங்கும் வழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட ஆறு விருதுகளை லியனார்டோ டிகாப்ரியோ நடித்த வண் பட்டில் ஆஃப்டர் எனொதர் வென்றது.
சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் தவிர வண் பட்டில் ஆஃப்டர் எனொதர் திரைப்படத்துக்காக ஷோன் பென் சிறந்த துணை நடிகர் விருதையும் போல் தோமஸ் அன்டர்சன் சிறந்த தத்தெடுக்கப்பட்ட திரைக்கதைக்கான விருதையும் அன்டி ஜூர்ஜென்ஸன் சிறந்த திரைப்பட எடிட்டிங்குக்கான விருதையும் கஸன்ரா குலுகுன்டிஸ் சிறந்த நடிகர் தேர்வுக்கான விருதையும் பெற்றனர்.
சின்னர்ஸ் திரைப்படத்துக்கான சிறந்த நடிகர் விருதை மைக்கல் பி ஜோர்தான் பெற்றதோடு, ஹம்னெட் திரைப்படத்துக்கான சிறந்த நடிகை விருதை ஜெஸி பக்லே பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .