2026 பெப்ரவரி 08, ஞாயிற்றுக்கிழமை

“கட்டி பிடிக்கலாமா?”

S.Renuka   / 2026 பெப்ரவரி 08 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 26 வயதான மலையாள நடிகை ஒருவர், சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி இருந்தார். 

நடிகை உணவு ஆர்டர் செய்வதற்காக இன்டர்காமில் தொடர்பு கொண்டபோது, அது வேலை செய்யாததால் கீழே ரிசப்ஷனில் சென்று புகார் அளித்ததாக தெரிகிறது. 

அப்போது இன்டர்காமை சரி செய்வதற்காக வந்த ஹோட்டல் ஊழியர், நடிகையிடம் கட்டிப்பிடிக்கலாமா? என்று கேட்டு அத்துமீற முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால், நடிகை பயந்து மாம்பலம் பொலிஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியபோது, தாம் இன்டர்காமை சரி செய்து விட்டு வந்துவிட்டதாக ஊழியர் கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும், நடிகை புகார் அளிக்க விரும்பாமல் அறையை காலி செய்து சென்றதாக கூறப்படுகிறது. பின்னர்  பொலிஸார் ஊழியரிடம் இனி இதுபோல் நடக்க கூடாது எழுதி வாங்கி கொண்டு அவரை அனுப்பி வைத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X