2025 டிசெம்பர் 29, திங்கட்கிழமை

கண்களால் ரசிகர்களை கவரும் நடிகை

Editorial   / 2025 டிசெம்பர் 29 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை ஸ்ரீ லீலா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

ஸ்ரீலீலா கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். தற்போது தமிழிலும் ஒரு படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

குழந்தை நட்சத்திரமாய் அறிமுகமாகி, பின்னர் நாயகியாக நடித்து வருகிறார். தெலுங்கு மட்டும் இல்லாமல் இவருக்கு ஹிந்தி மொழியில் நடிக்கும் வாய்ப்பும் தற்போது கிடைத்து நடித்து வருகிறார்.

ஸ்ரீலீலாவின் நடனத்திற்காகவே அவர் புஷ்பா 2 படத்தில் கமிட் ஆகி, அந்த பாடலும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. இவர் 2022ல் 2 குழந்தைகளை தத்தெடுத்தார்.

சமீபத்தில் இன்னொரு பெண் குழந்தையும் இவர் தத்தெடுத்துள்ளார். இவர் தற்போது கைவசம் ஏகப்பட்ட படங்களை வைத்து நடித்து வருகிறார். அத்துடன் போட்டோஷூட்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது ஸ்ரீலீலாவின் நடிப்பில் வெளியாகவுள்ள பராசக்தி படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இவர் வெளியிட்ட இந்த புகைப்படத்தில் க்யூட் ஹேர்ஸ்டைலில் அழகான காஸ்ட்யூமில் போஸ் கொடுத்துள்ளார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து ட்ரெண்ட் ஆகி வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X