2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

கோலாகலமாக நடந்த வளைகாப்பு

Freelancer   / 2023 செப்டெம்பர் 18 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் தனது மனைவியின் வளைகாப்பு விழாவை கோலாகலமாக நடத்தியுள்ளார். விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்து குக் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகழுக்கு இந்த நிகழ்வு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் புகழ் படிப்படியாக பட வாய்ப்புகளுக்கு வழிவகுத்தது. அந்த வகையில் சந்தானத்தின் சபாபதி படத்தின் மூலம் அறிமுகமானவர், அதன் பிறகு சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், சசிகுமாரின் அயோத்தி, விஜய் சேதுபதியின் டிஎஸ்பி போன்ற படங்களில் நடித்தார்.  

இவர் கடந்த ஆண்டு தனது நீண்ட நாள் காதலி பென்சியை குடும்ப சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த மாதம் புகழேந்தி தனது மனைவி கர்ப்பமான செய்தியை அழகான போட்டோ ஷூட் மூலம் அறிவித்தார். இந்நிலையில் நேற்றைய தினம் புகழேந்தி தனது மனைவி பென்சிக்கு வளைகாப்பு நடத்தியுள்ளார். இந்த ஆடம்பர வளைகாப்பு நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி மற்றும் விஜய் டிவி நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .