J.A. George / 2022 ஏப்ரல் 26 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ . அனிருத் இசையில் உருவாகிய இந்தத் திரைப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் திரைப்படம் வெளியாக இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு உணர்ச்சிகரமான பதிவு செய்துள்ளார்.
என் லவ் மற்றும் பேபி உடன் கடைசி சில நாட்கள். இந்த வலி தேவை தான். காதல் என்றாலே வலி இருக்கும். ஒரு திரைப்படம் வெளியாகும்முன் கடைசி சில நாட்கள் பிரசவ வலிக்கு இணையானது.
இசையமைப்பாளர் அனிருத்துடன் தொடர்ச்சியாக ஒவ்வொரு காட்சியையும் மீண்டும் மீண்டும் பார்த்து வருகிறேன். இந்தத் திரைப்படத்தில் அனைவரும் அருமையாக நடித்திருக்கிறார். நேசத்துடன் இந்த திரைப்படத்துக்காக அதிகம் உழைத்து உள்ளேன்” என்று உணர்ச்சிகரமாக பதிவு செய்துள்ளார்.
3 hours ago
9 hours ago
17 Jan 2026
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
17 Jan 2026
17 Jan 2026