Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 24 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக்பாஸ் வீட்டில் இன்று யாஷிகா ஆனந்த் மற்றும் மகத் ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினராக வந்திருக்கின்றனர் என்பது தெரிந்ததே. போட்டியாளர்கள் இருவரையும் உற்சாகமாக வரவேற்று உள்ள நிலையில் இன்றைய மூன்றாவது ப்ரமோ வீடியோவில் மகத், யாஷிகா இருவரும் ஷெரினுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கின்றனர்.
அதில் உங்களுக்கு பிடித்த யாராவது ஒருவருக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும். அந்த கடிதம் சம்பந்தப்பட்டவரிடம் கொண்டுபோய் கொடுக்கப்பட மாட்டாது, அதேபோல் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட மாட்டாது. நீங்கள் உங்கள் மனதில் உள்ளவற்றை அந்த கடிதத்தில் தாராளமாக எழுதலாம் என்று கூறுகிறார்
இதனை அடுத்து ஷெரின் தனியே உட்கார்ந்து காதல் ரசம் சொட்ட சொட்ட ஒரு கடிதம் எழுதுகிறார் அந்த கடிதத்தில் இருப்பதாவது: You are my Sunshine on a Cloudy day. Ther is so much I want to say You light up the Darkest parts of me...
இந்த கடிதத்தை எழுதி முடித்த பின்னர் திடீரென பிக்பாஸ், யாஷிகா மற்றும் மகத் நீங்க ரெண்டு பேரும் ஷெரின் யாருக்கு கடிதம் எழுதினாரோ அவருக்கு கொடுத்துடுங்க...என்று கூறுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஷெரின் வேகமாக ஓடிப்போய் அந்த கடிதத்தை சுக்குநூறாய் கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டுவிடுகிறார்
ஷெரின் பதட்டத்தோடு கிழித்து போட்டதில் இருந்து அந்த கடிதத்தை அவர் தர்ஷனுக்கு எழுதியிருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இருப்பினும் இன்றைய முழு நிகழ்ச்சியையும் பார்த்தால் இந்த புதிருக்கு விடை கிடைக்கலாம்.
15 minute ago
30 minute ago
50 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
30 minute ago
50 minute ago
55 minute ago