2025 மே 06, செவ்வாய்க்கிழமை

குரங்குகளுடன் ஆங்கிலத்தில் பேசிய நிக்கி கல்ராணி

J.A. George   / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

குரங்குகளுக்கு உணவு தின்பண்டங்கள் அளித்ததோடு அதனுடன் ஆங்கிலத்தில் பேசிய வீடியோவை தமிழ் நடிகை நிக்கி கல்ராணி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

ஜிவி பிரகாஷ் நாயகனாக அறிமுகமான ’டார்லிங்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி.

அண்மையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிக்கி கல்ராணி, தற்போது அதிலிருந்து குணமாகி, மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில், குரங்குகளுக்கு பிஸ்கட் மற்றும் சில தின்பண்டங்களை கொடுத்து அதனுடன் தமிழ் மட்டுமின்றி இங்கிலீஷிலும் காமெடியாக பேசிக் கொண்டிருந்த சில காட்சிகளின் வீடியோவை பதிவு செய்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X