Freelancer / 2021 ஒக்டோபர் 10 , பி.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக சமீபத்தில் அறிவித்தனர்.
நடிகை சமந்தா இந்த வருட இறுதியில் நாக சைதன்யாவுடன் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டிருந்ததாக ‘சகுந்தலம்’ படத்தின் தயாரிப்பாளர் நீலிமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த சமீபத்திய பேட்டியில், “சகுந்தலம் படத்துக்காக நானும் எனது தந்தை குணசேகரும் சமந்தாவை அணுகியபோது அவருக்கு கதை மிகவும் பிடித்துவிட்டது, ஆனால், படத்தை ஜூலை அல்லது ஓகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க முடியுமா என்று கேட்டார்.
நான் ஏன் என்று கேட்டேன், அதற்கு ‘நாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளோம். தாயாக விரும்புவதற்குத் தான் முன்னுரிமை அளிப்பேன். குழந்தை பிறந்தால் அதுதான் என் உலகமாக இருக்கும்’ என்றார்.
அதோடு, ‘சாகுந்தலம்’ சரித்திர கதையம்சம் கொண்ட படம், முடிவடைய நீண்டகாலம் ஆகும் என்பதால், சமந்தா ஆரம்பத்தில் இந்த படத்தில் கையெழுத்திட தயங்கினார்.
ஆனால், திட்டமிட்டப்படி படத்தை முடித்துவிடுவோம் என்ற பின்னரே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இதுதான் அவரது கடைசிப் படம் என்றும் அதன் பின்னர் நீண்ட இடைவெளி எடுத்து குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.
இதனால், நாங்கள் ஓய்வு எடுக்காமல் படத்தை விரைவாக முடிக்க உழைத்தோம்” என்று தெரிவித்துள்ளார்.
14 minute ago
44 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
44 minute ago
46 minute ago
1 hours ago