2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

கே.பாக்யராஜ் வீட்டில் நிகழ்ந்த சோகம்

Editorial   / 2020 செப்டெம்பர் 02 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் மிகச் சிறந்த திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவரான கே பாக்யராஜின் வீட்டில் நிகழ்ந்த சோகம் ஒன்றுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கே பாக்யராஜின் மனைவியும் நடிகையுமான பூர்ணிமா பாக்யராஜின் தாயார் சுபலட்சுமி என்பவர் இன்று காலமானார். அவருக்கு வயது 85.

கடந்த சில நாட்களாக அவர் உடல் நலமில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

சுபலட்சுமி அவர்களுக்கு பூர்ணிமா பாக்கியராஜ் என்ற மகளும் ஸ்ரீராம் என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த சுபலட்சுமி அவர்களின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என தெரிகிறது. கே பாக்யராஜின் மாமியாரும் பூர்ணிமா பாக்யராஜ் தாயாருமான சபலட்சுமியின் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X