2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சர்ச்சையில் சிக்கிய நடிகை

Freelancer   / 2023 ஒக்டோபர் 04 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘எனக்கு என்டே கிடையாது' என்ற படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் சுவயம் சித்தா பங்கேற்காமல் புறக்கணித்து விட்டதாக சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

பிரபல இளம் நடிகை சுவயம் சித்தா.  'எனக்கு என்டே கிடையாது' என்ற படத்தில் நாயகியாக நடித்து இருக்கிறார். இந்த படத்தில் விக்ரம் ரமேஷ் கதாநாயகனாக நடித்து டைரக்டு செய்துள்ளதோடு கார்த்திக் வெங்கட்ராமன் தயாரித்துள்ளார்.

இந்தநிலையில் இப் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் சுவயம் சித்தா பங்கேற்காமல் புறக்கணித்து விட்டதாக சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

இதுகுறித்து டைரக்டர் விக்ரம் ரமேஷ் கூறும்போது, "படத்தில் ஒப்பந்தம் செய்தபோதே படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்று தெரிவித்தோம். ஆனால் சுவயம் சித்தா வரவில்லை. இந்தியன்-2 உள்ளிட்ட இதர பட வேலைகளில் இருப்பதாக சொல்கிறார்கள். இனிமேல் பெரிய படங்களில்தான் அவர் நடிப்பார் போலும்'' என்று காட்டமாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியான சுவயம் சித்தா குற்றச்சாட்டுக்கு விரைவில் பதில் அளிப்பார் என்று கூறப்படுகிறது.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X