J.A. George / 2023 ஓகஸ்ட் 07 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் விஜய ராகவேந்திரா. இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு பொலிஸ் அதிகாரி சிவராம் என்பவரின் மகளான ஸ்பந்தனாவை திருமணம் செய்து கொண்டார்.
இத்தம்பதிக்கு சவுர்யா என்ற மகன் உள்ளார். ஸ்பந்தனா கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான அபூர்வா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், நடிகர் விஜய ராகவேந்திரா தன் மனைவி ஸ்பந்தனா மற்றும் மகனுடன் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றிருந்தார்.

சுற்றுலாவுக்குச் சென்றிருந்த இடத்தில், ஸ்பந்தனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். பிரபல நடிகரின் மனைவி இறந்த சம்பவம் கன்னட சினிமா உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, ஸ்பந்தனாவின் உடலை இந்தியா கொண்டு வர அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago