2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சோகத்தில் ஜூஹி சாவ்லா

J.A. George   / 2020 டிசெம்பர் 16 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு காலத்தில் பொலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜூஹி சாவ்லா, அணியும் ஆடை, அணிகலன்களுக்கென்றே பெண் ரசிகைகள் ஏராளம். தமிழில் அவர், பருவராகம் மற்றும் ரஜினியின் நாட்டுக்கு ஒரு நல்லவன் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ஜூஹி வெளியிட்டுள்ள பதிவில், மும்பை சர்வதேச விமான நிலையத்தில் வைத்து தனது வைரத் தோடு காணாமல் போய் விட்டதாக சோகமாகக் கூறியுள்ளார்.

காணாமல் போன தோட்டின் ஜோடியான மற்றொரு தோட்டின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஜூஹி, கூடவே, “அந்தத் தோடை நான் கடந்த 15 வருடங்களாக தினமும் அணிந்து வருகிறேன். 

அது எனக்கு ராசியான தோடு. தயவு செய்து காணாமல் போன அந்த தோடைக் கண்டவர்கள் அருகில் உள்ள காவல்நிலையத்தில் தெரிவியுங்கள். நிச்சயம் தகுந்த சன்மானம் அளிப்பேன். தயவு செய்து உதவுங்கள்” எனக் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X