Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Freelancer / 2022 ஏப்ரல் 30 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிவூட் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸின் வங்கிக் கணக்குகளிலுள்ள 7.12 கோடி இந்திய ரூபாய் நிரந்தர வைப்புத் தொகையை இந்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முடக்கியுள்ளனர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மருந்து கம்பெனி உரிமையாரின் மனைவியை மிரட்டி ரூ.200 கோடி பணம் பறித்த வழக்கில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சுகேஷ் சந்திரசேகர் என்பவரைக் கைது செய்துள்ளனர்.
அவர் மிரட்டி பறித்த பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களை பொலிவூட் நடிகைகளுக்கு செலவு செய்துள்ளதாகவும் சுகேஷ் சந்திரசேகருடன் நெருக்கமான தொடர்பில் இருந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சில பரிசுப் பொருள்களைப் பெற்றமையும் விசாரணைகளில் தெரியவந்தது.
ஜாக்குலினுக்கு 7 கோடி ரூபாய் மதிப்பான தங்க ஆபரணங்கள், குதிரை, 15 ஜோடி தோடுகள், 5 ஆடம்பர கைப்பைகள், பெறுமதியான 4 பூனைக் குட்டிகள் போன்ற பல பரிசுப்பொருட்களை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
அத்துடன், ஜாக்குலின் சகோதரிக்கும் சகோதரருக்கும் அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலிய டொலர்களையும் சுகேஷ் சந்திரசேகர் கொடுத்தது அமலாக்கப்பிரிவு விசாரணையில் தெரிய வந்ததையடுத்து, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ஜாக்குலினை பல முறை விசாரணைக்காக அழைத்திருந்தனர்.
இவ்வழக்கில் புதிய திருப்பமாக ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளில் இருந்த 7.12 கோடி ரூபாய் நிரந்தர வைப்புப் பணம் அமுலாக்கப்பிரிவு அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தொழிலதிபரின் மனைவியிடம் மிரட்டிப் பறித்த பணத்தில் ரூ.5.71 கோடி மதிப்புள்ள பரிசுப்பொருட்களை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு கொடுத்திருப்பதாக அமலாக்கப்பிரிவு கணித்துள்ளது.
மேலும் ஜாக்குலின் குடும்ப உறுப்பினர்களுக்கு 1.73 லட்சம் அமெரிக்க டொலர், 27 ஆயிரம் அவுஸ்திரேலியா டொலர் கொடுத்திருப்பதாக அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 May 2025
04 May 2025