2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஜிகர்தண்டா-2 அப்டேட்

Freelancer   / 2023 ஒக்டோபர் 08 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

'ஜிகர்தண்டா'படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
 

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் முதல் பாடலான 'மாமதுர' பாடல் 9-ஆம் திகதி நண்பகல் 12.12 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், "ஜிகர்தண்டா -2 படத்தின் முதல் பாடலுக்கு நடனமாட நேரம் நெருங்கிவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X