2026 பெப்ரவரி 10, செவ்வாய்க்கிழமை

தங்க திருட்டில் சிக்கிய நடிகர்

S.Renuka   / 2026 பெப்ரவரி 10 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சபரிமலை துவாரபாலகர் சிலைக்கு முலாம் பூச வழங்கப்பட்ட தங்கத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் வழக்கில், நடிகர் ஜெயராமுக்கு அமுலாக்கத் துறை (ED) மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே சென்னையில் உள்ள நடிகர் ஜெயராமின் வீட்டில் அமுலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, தற்போது அவர் கொச்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சபரிமலை தங்கத் திருட்டு வழக்கு தொடர்பான விசாரணை தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் மேலும் பரபரப்பான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னணி

உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறையின் வாயிலில் இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க நகை கவசங்கள் 2019ஆம் ஆண்டு கழற்றப்பட்டு செப்பனிடும் பணிக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

காணாமல் போன தங்கம்

பின்னர் தங்க முலாம் பூசி மீண்டும் அதனை கோயிலுகு கொண்டு வந்தனர். அப்போது அவற்றின் எடை குறைந்ததாக குற்றம் சாட்டு எழுந்தது. மேலும் அந்த சிலைகளில் இருந்த தங்கம் திருடப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டு கேரள சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. எதிர்க்கட்சிகள் அரசு மீதும், தேவசம் போர்டு மீதும் குற்றம் சாட்டின.

இதற்கிடையில் உரிய விசாரணை நடத்த கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக சிறப்பு புலனாய்வுக் குழு(எஸ்.ஐ.டி) அமைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த குழுவினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் தங்க கவசங்களை புதுப்பிக்கும் செலவை ஏற்றுக் கொண்ட பெங்களூர் தொழில் அதிபர் உன்னிகிருஷ்ணன் முதலில் கைது செய்யப்பட்டார்.

நடிகர் ஜெயராம்

அவர் கொடுத்த தகவலின் பேரில் கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்திலுள்ள டவுனில் நகைக்கடை நடத்தி வரும் தங்க வியாபாரியான கோவர்தன் நகைக்கடையில் இருந்து 478 கிராம் தங்க நகை மீட்கப்பட்டது. இதற்கிடையில் தங்கக் கடத்தல் விவகாரத்தில் நடிகர் ஜெயராம் மீதும் சர்ச்சை எழுந்தது.

2019-ம் ஆண்டு சபரிமலை ஐய்யப்பன் கோவில் துவாரபாலகர் சிலைகளை வைத்து சென்னையில் நடைபெற்ற ஒரு பூஜையில் அவர் கலந்து கொண்டதே இந்தக் குற்றச்சாட்டுக்கு காரணமாக அமைந்தது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .