Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2018 ஜூன் 25 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
தம்பி கார்த்தி, சிறந்த கதைகளாகத் தெரிவுசெய்து நடித்து, வேகமாக வளர்ந்து வருவதாக, அண்ணன் நடிகர் சூர்யா, பாராட்டியுள்ளார்.
இது குறித்து, சூர்யா கூறியுள்ளதாவது,
“கார்த்தி நடித்தத் திரைப்படங்களில், “தீரன் அதிகாரம் ஒன்று”, எனக்குப் பிடித்த திரைப்படங்களில் ஒன்றாகும். அந்தக் கதாபாத்திரத்துக்காக, கார்த்தி தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தார்.
“அதேபோன்று, இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்துள்ள “கடைக்குட்டி சிங்கம்” படத்திலும், முழு விவசாயியாக மாறி நடித்துள்ளார். ஒரு நடிகர் என்பதை மறந்துவிட்டு, அவரை ஒரு விவசாயியாகவே முழுமையாகப் பார்க்க முடியும் என்பதை, அந்தத் திரைப்படத்தின் புகைப்படங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
“அதனால், “தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தை அடுத்து, இந்தக் “கடைக்குட்டி சிங்கம்” திரைப்படத்தில், இன்னும் அதிகப்படியான இரசிகர்களை, கார்த்திக் இம்ப்ரஸ் பண்ணுவார் என்று, தான் எதிர்பார்ப்பதாக, சூர்யா தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago