S.Renuka / 2025 டிசெம்பர் 04 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86. வயது மூப்பு காரணமாக அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்திய திரைத்துறையின் பழைமையான திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏவிஎம் ப்ரொடக்ஷன்ஸ்.
தமிழ் உட்பட பல்வேறு இந்திய மொழிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை ஏவிஎம் தயாரித்துள்ளது.
நடிகர்கள் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகியோரை வெள்ளித்துறையில் அறிமுகம் செய்த நிறுவனம்.
இதன் நிறுவனர் ஏ.வி.மெய்யப்பனின் மகன்களில் ஒருவர்தான் ஏவிஎம் சரவணன். தங்களது திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் நிர்வாக ரீதியாக பல்வேறு பொறுப்புகளை ஏவிஎம் சரவணன் கவனித்துள்ளார்.
இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பின் தலைவர் பொறுப்பையும் இவர் கவனித்துள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதை பெற்றுள்ளார்.
வெள்ளை நிற ஆடையை அணிவது அவரது அடையாளமாக இருந்தது. அவரது மறைவுக்கு தமிழ் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
30 minute ago
35 minute ago
35 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
35 minute ago
35 minute ago
49 minute ago