Freelancer / 2023 ஒக்டோபர் 03 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 68’ படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் இந்த படத்தில் 25 வயது இளைஞனாக விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சர்வதேச தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, விஜய்யின் ஸ்டண்ட் மற்றும் நடனக் காட்சிகள் படமாக்க இருப்பதாகவும், இதற்காக உலக அளவில் பிரபலமான தொழில்நுட்ப கலைஞர்கள் பயன்படுத்த இருப்பதாகவும், அதிரடி ஸ்டாண்ட் காட்சிகளை 20 கேமராக்கள் கொண்டு படமாக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
25 வயது இளைஞர் மற்றும் 50 வயது அப்பா கேரக்டர் என இரண்டு விதமான வித்தியாசமான கேரக்டரில் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படுவது படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.
விஜய்யுடன், த்ரிஷா, பிரியங்கா மோகன், மீனாட்சி சவுத்ரி, அரவிந்த்சாமி, பிரபுதேவா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இந்த படத்தில் மோகன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் இந்த படம் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
40 minute ago
44 minute ago
05 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
44 minute ago
05 Mar 2026