2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீது என்கவுண்டர்

Editorial   / 2025 செப்டெம்பர் 18 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானியின் வீட்டின் வெளியே துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள நடிகை திஷா பதானியின், வீட்டின் வெளியே கடந்த 12ஆம் திகதி அதிகாலையில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பான சூழல் நிலவியது. இவ்வழக்கில் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் ரவிந்திரா மற்றும் அருண் எனும் இருவர் என கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், அவ்விருவரையும் காசியாபாத் அருகே காவல் துறையினர் சுற்றிவளைத்தனர். அப்போது, அவர்கள் இருவரும் காவல் துறையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, காவல் துறையினர் நடத்திய பதில் துப்பாக்கிச்சூட்டில் இருவரும் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X