Editorial / 2025 டிசெம்பர் 14 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

மலையாள நடிகர் அகில் விஸ்வநாதன் (வயது 30) உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மலையாளத்தில் வெளியான ‘சோழா’, ‘ஆபரேஷன் ஜாவா’ உள்பட சில படங்களில் நடித்திருந்தவர், அகில் விஸ்வநாதன். இதில் ‘சோழா’ படத்தில் சிறப்பாக நடித்தற்காக கேரள மாநில அரசின் விருதை கடந்த 2019-ம் ஆண்டு பெற்றார்.
மாணவராக இருந்தபோது தனது சகோதரர் அருணுடன் நடித்த ‘மங்காண்டி’ என்ற தொலைக்காட்சி படத்துக்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான மாநில அரசின் விருதையும் அவர் பெற்றுள்ளார்.
திருச்சூரில் உள்ள மத்தத்தூரில் வசித்து வந்த அகில் விஸ்வநாதன், சனிக்கிழமை (13) காலை வீட்டில் சடலமாக கிடந்தார். அவருடைய தாயார் கீதா வேலைக்குச் செல்வதற்காக புறப்பட்டபோது, அகில் உயிரற்றுக் கிடந்ததைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். மறைந்த அகிலின் தந்தை விஸ்வநாதன், பைக் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
17 minute ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025