Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 07 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் சுஷாந்த் மரண விவகாரத்தில் காரசாரமான கருத்துக்களை வெளியிட்டுவரும் நடிகை கங்கனா ரனாவத்திற்கு ‘Y+’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது
மும்பைக்கு வருகிற 9ம் திகதி தான் வரபோவதாகவும், துணிச்சல் இருந்தால் தடுத்து பாருங்கள் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு நடிகை கங்கனா ரனாவத் சவால் விடுத்துள்ளார்.
மும்பை மாநகரம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் மாறியுள்ளதாக கங்கனா ரனாவத் டிவிட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சஞ்சய் ராவத், அச்சமாக இருந்தால் மும்பைக்கு வர வேண்டாம் என விமர்சித்திருந்தார். அவரது கருத்துக்கு பதிலளித்த கங்கனா, மும்பை என்பது சிவசேனா கட்சி மட்டுமல்ல என காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
சிவசேனா தொண்டர்கள் என்ன மிரட்டல் விடுத்தாலும், 9ம் திகதி நிச்சயம் மும்பைக்கு வருவேன் எனவும் குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
இமாச்சல பிரதேசத்தில் தங்கியுள்ள கங்கனாவின் வீட்டுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அவருக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
19 minute ago
28 minute ago
33 minute ago