2022 ஓகஸ்ட் 15, திங்கட்கிழமை

நள்ளிரவு படுக்கைக்கு செல்லாததால் பெரிய ஹீரோக்களுடன் நடிக்கல

Editorial   / 2022 ஓகஸ்ட் 02 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

உட்காரு, எழு என்று ஹீரோ என்ன சொன்னாலும் செய்ய வேண்டும். ஒரு ஹீரோ உங்களை நள்ளிரவில் வீட்டிற்கு வரச் சொன்னால் நீங்கள் செல்லவேண்டும். அப்போது தான் நீங்கள் அந்த ஹீரோவின் நட்பு வட்டத்தில் இருப்பீர்கள். நள்ளிரவில் அவர் அழைக்கும் போது போகவில்லை என்றால் அந்த படத்தில் இருந்து நீங்கள் தூக்கி எறியப்படுவீர்கள்.தங்கள் கட்டுப்பாட்டில், தாங்கள் சொல்வதை எல்லாம் கேட்டு அட்ஜஸ்ட் பண்ணும் நடிகைகளை தான் அவர்களுக்கு பிடிக்கும். எனக்கு அது பிடிக்காது என்று பிரபல நடிகை மல்லிகா ஷெராவத் பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் மீது சில கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

ஆனால் அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. மல்லிகா ஷெராவத்தின் துணிச்சலான பேட்டியால் புதிய விவாதம் தொடங்கியுள்ளது. மல்லிகா இந்தி சினிமாவின் இருண்ட பக்கத்தை வெளிக்கொண்டு வர முயற்சி செய்துள்ளார்.

நடிகை மல்லிகா ஷெராவத் 2002ல் திரையுலகில் நுழைந்தார். 2004 ஆம் ஆண்டு வெளியான 'மர்டர்' படத்தின் மூலம் அவருக்கு புகழ் கிடைத்தது. தமிழில் கமல்ஹாசனின் தசவதாரம் படத்தில் நடித்து உள்ளார்.சிம்புவின் ஒஸ்தி பட த்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார்.

மல்லிகா ஷெராவத் சினிமா உலகில் நுழைந்தபோது சவாலான கதாபாத்திரங்களில் நடித்தார். அதற்காக அவர் எல்லாவற்றிலும் சமரசம் செய்து கொள்வார்கள் என்று அர்த்தம் இல்லை. என்னுடன் படத்தில் நடிக்க முன்னணி ஹீரோக்கள் மறுத்துவிட்டனர். ஏனென்றால் அவர்களுடன் நான் சமரசம் செய்து கொள்ளவில்லை என்றார் மல்லிகா ஷெராவத் கூறி உள்ளார்.

 மல்லிகா ஷெராவத் கூறியதாவது:-

கட்டுப்படுத்த முடியும் என்ற நடிகையைதான் ஹீரோக்கள் விரும்புகிறார்கள், எந்த நடிகை அவர்களுடன் சமரசம் செய்கிறாரோ அவருக்கே வாய்ப்பு . நான் அப்படி இல்லை. என்னுடைய ஆளுமை அப்படி இல்லை. வேறொருவரின் பாலியல் ஆசைக்கு நான் ஆளாக விரும்பவில்லை.

நான் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்ய முயற்சி செய்தேன். அனைவரையும் போன்று நானும் சில தவறுகள் செய்தேன். சில கதாபாத்திரங்கள் நல்லதாக இருந்தன, சில இல்லை. ஆனால் என் திரைப்பயணம் சிறப்பானதாக இருந்தது என கூறினார்.

மல்லிகா ஷெராவத் தற்போது 'ஆர்கே/ஆர்கே' படத்தின் புரமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இந்தப் படம் ஜூலை 22ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை ரஜத் கபூர் இயக்குகிறார். குப்ரா சேத் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .