2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

பிக் பாஸ் வீட்டில் வெடித்த புதிய சண்டை!

J.A. George   / 2020 ஒக்டோபர் 09 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக் பாஸ் 4வது சீசனில் தற்போது ரேகா மற்றும் சனம் ஷெட்டி ஆகியோர் இடையே புதிய சண்டை வெடித்து இருக்கிறது.

பிக்பாஸ் நான்காவது சீசன் முதல் வாரத்திலேயே பரபரப்பை எட்டி இருக்கிறது என்று சொல்லுமளவுக்கு தினந்தோறும் ஏதாவது சண்டை, வாக்குவாதம் நடந்து வருகிறது. 

கடந்த சில தினங்களாக அனிதா சம்பத். சுரேஷ் சக்ரவர்த்தி உடன் பிரச்சனை வெடித்த நிலையில் அவர்கள் தினம் தோறும் அது பற்றி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த பிரச்சினை காரணமாக சுரேஷ் சக்ரவர்த்தி குக்கிங் டீமில்லிருந்து வெளியேறி பாத்ரூம் கிளீனிங் டீமிற்கு மாறிவிட்டார். 

அனிதா மட்டும் இன்றி குக்கிங் டீமில் இருந்த சனம் ஷெட்டி உடனும் சுரேஷ் சக்கரவர்த்திக்கு கருத்து வேறுபாடு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேறிய பிறகு பிரச்சனை முடிந்தது என நாம் பார்த்தால். தற்போது சனம் ஷெட்டி மற்றும் ரேகா இடையே புது பிரச்சனை வெடித்திருக்கிறது.

'எனக்கு சண்டை போட வேண்டுமென இஷ்டம் இல்லை சனம்' என ரேகா கூறியிருப்பது தற்போது வந்திருக்கும் 5ஆம் நாள் முதல் ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டிருக்கிறது.

"சாப்பாடு, பருப்பு வைத்தது தப்பா. நான் உனக்கு உதவி தான் செய்தேன்" என்றார் ரேகா சனம் ஷெட்டியிடம் கூற, அதற்கு ரம்யா பாண்டியன் 'யாருக்கும் உதவி செய்யாதீர்கள்' என கூறுகிறார். 

அதைக் கேட்டு கோபமான ரேகா, 'நான் குக்கிங் டீம் கேப்டன்" என அவரிடம் கூறுகிறார்.

அதனால் யார் கேப்டன் என ரம்யா பாண்டியன் மற்றும் ரேகா இடையே வாக்குவாதம் நடக்கிறது. 'நீங்கள் வீட்டின் கேப்டன், நான் குக்கிங் டீம் கேப்டன் 'என சொல்கிறார் ரேகா.

இதனை தொடர்ந்து சனம் இந்த பிரச்சனைக்காக தலையில் அடித்துக் கொள்கிறார்.. இதுவும் தற்போது வந்திருக்கும் ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டிருக்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .