Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
R.Tharaniya / 2025 ஜூலை 14 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
அறிமுக இயக்குநர் ஹரி கே சுதன் தயாரித்து, எழுதி, இயக்க, புதுமுகம் சாய்ஸ்ரீ பிரபாகரன் நடிப்பில், ஒரு கன்னியாஸ்திரியாக வாழும் ஒரு இளம்பெண்ணின் உணர்வுகளின் பின்னணியில், அன்பினைப் பேசும் அழகான கதையாக உருவாகியுள்ள திரைப்படம் “மரியா”.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. பூமியில் சூழலில் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு பாதையை வாழ்க்கையாக தேர்ந்தெடுக்கிறார்கள்.
அன்பின் பாதை எல்லோருக்கும் உரிமையானது. மரியா ஒரு கன்னியாஸ்திரி பெண் , அவள் ஒரு சாதாரண பெண்ணைப் போல வாழ விரும்புகிறாள், ஆனால் சமூகமும் அவளைச் சுற்றியுள்ள மக்களும் அதை கடினமாக்குகிறார்கள்.
அவளின் அன்பு ஜெயிக்கிறதா? அவள் கனவு நனவானதா ? என்பதே இப்படத்தின் கதைகளம்.ஒவ்வொரு தவறுக்குப் பின்னும் ஒரு நியாயம் உண்டு, அந்த நியாயத்தை அழுத்தமாக பேசும் ஒரு அழகான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் சென்னை அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் மற்றும் சிதம்பரம் பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் அறிமுக நடிகை "சாய்ஸ்ரீ பிரபாகரன்" முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். "பவேல் நவகீதன்" ஒரு மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார், சித்து குமரேசன், விக்னேஷ் ரவி சுதா புஷ்பா, ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
"மரியா" திரைப்படம் , சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை வென்றுள்ளது. இத்தாலி, மலேசியா, இலண்டன், நேபாளம், புது டெல்லி, ஹரியானா, மும்பை, கேரளா, உத்தரபிரதேசம், கொல்கத்தா ஆகிய நாடுகளில் திரையிடப்பட்டுள்ளது.
மேலும், "சிறந்த இந்திய திரைப்படம்", "சிறந்த இயக்குநர்", "சிறந்த திரைக்கதை", "சிறந்த நடிகை", "சிறந்த இசை" என பல விருதுகளையும் பெற்றுள்ளது.
உலகமெங்கும் சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களைப் பெற்ற நிலையில் விரைவில் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago