Freelancer / 2023 ஒக்டோபர் 05 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிக் பாஸ் பிரபலம் விமான நிலையத்தில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மலையாளத்தில் மோகன்லால் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் மாடலும் நடிகருமான ஷியாஸ் வைல்ட் கார்ட் போட்டியாளராக பங்கேற்று பிரபலமடைந்தார்.
ஷியாஸ் மீது கேரள மாநிலம் காசர்கோடில் உள்ள படன்னாவைச் சேர்ந்த 32 வயதான பெண் ஜிம் பயிற்சியாளர் ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருந்தார்.
அந்தப் புகாரில் ஷியாஸ் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தன்னிடம் இருந்து ரூ.11 லட்சம் மோசடி செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக ஷியாஸ் தன்னுடன் உறவில் இருந்ததாக குறிப்பிட்டுள்ள அவர், கர்ப்பமான தன்னை ஷியாஸ் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியதாகவும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஷியாஸ் வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்து கொள்ள இருப்பதாக வெளியான தகவலை அடுத்து ஷியாஸ் மீது அந்தப் பெண் புகார் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, ஷியாஸ் கரீம் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டதால், வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த ஷியாஸ், சுங்கத்துறை அதிகாரிகளால் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இதையடுத்து சென்னை சுங்கத்துறையினர் கேரளா பொலஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து அடுத்து ஷியாஸை கைது செய்துள்ளனர்.

9 minute ago
35 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
35 minute ago
3 hours ago
4 hours ago