2025 மே 07, புதன்கிழமை

பிக்பாஸ் போட்டியாளர்களின் இறுதி பட்டியல் லீக்கானது!

Editorial   / 2020 செப்டெம்பர் 29 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வரும் ஒக்டோபர் நான்காம் திகதி முதல் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகியிருந்தன.

இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் இறுதிப் பட்டியல் லீக்காகி உள்ளது.
சனம் ஷெட்டி, கேப்ரில்லா, நடிகை ரேகா, நடிகை ஷிவானி நாராயணன், நடிகை ரம்யா பாண்டியன், ஆர்ஜே அர்ச்சனா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். 

இதில் புதிதாக தற்போது விஜய் டிவி பிரபலம் அறந்தாங்கி நிஷா இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

மேற்கண்ட பெண் போட்டியாளர்கள் தவிர ஆண் போட்டியாளர்களாக பாடகர் ஆஜித், பாடகர் வேல்முருகன், நடிகர் பாலாஜி முருகதாஸ், ,நடிகர் சுரேஷ், நடிகர் ஜித்தன் ரமேஷ், நடிகர் ஆரி, நடிகர் அனுமோகன், மாடல் சோம்சேகர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்களின் இறுதிப்பட்டியல் இதுதான் என்பது தெரியவந்துள்ளது. 
--


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X