Editorial / 2019 செப்டெம்பர் 30 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக முதல் மற்றும் இரண்டாம் சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்கள் விருந்தினராக வருகை தந்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்கு 4 சிறப்பு விருந்தினர்கள் வருகை தந்துள்ளனர். ரேஷ்மா, மீராமிதுன், மோகன் வைத்யா மற்றும் பாத்திமா பாபு ஆகிய நால்வர் பிக் பாஸ் வீட்டுக்குள் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்துள்ளனர். அவர்களை வெகு உற்சாகமாக போட்டியாளர்கள் வரவேற்கின்றனர்.
ஏற்கெனவே பிக்பாஸ் வீட்டில் நான்கு போட்டியாளர்கள் மட்டுமே இருப்பதால் சிறப்பு விருந்தினர்கள் நால்வர் வந்திருந்ததால் பிக்பாஸ் வீடு கலகலப்பாக இருக்கிறது. இதனால் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து வரவேற்பு அளித்து கொண்டிருக்கின்றனர்.
பிக்பாஸ் வீட்டில் மீரா இருந்த ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனையை கிளப்பி கொண்டிருந்தார். சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் இன்றும் அவர் ஏதாவது பிரச்சனையை கிளப்புவாரா? அல்லது அமைதியாக திரும்புவாரா? என்பதை பார்ப்போம்.
29 minute ago
38 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
38 minute ago
49 minute ago