Editorial / 2020 செப்டெம்பர் 17 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
விஜய் நடித்த வேட்டைக்காரன் திரைப்படத்தை இயக்கிய பாபு சிவன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 54.
சென்னை தாம்பரத்தில் வசித்து வந்த பாபுசிவன், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சென்னை அரசு ராஜீவ்காந்தி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழப்புக்காக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.
அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். பிரபல இயக்குநர் தரணியின் உதவியாளராக இருந்தவர் பாபுசிவன்.
விஜய் நடித்த குருவி திரைப்படத்தின் வசனங்களை பாபுசிவன் தான் எழுதியிருந்தார்.
2009 ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில், விஜய் நடித்த 'வேட்டைக்காரன்' திரைப்படத்தை இயக்கினார் பாபுசிவன்.
11 minute ago
31 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
31 minute ago
45 minute ago
2 hours ago