Freelancer / 2023 ஜூலை 17 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் ’கமல் 234’ திரைப்படத்தில் த்ரிஷா தான் ஹீரோயின் என்று சொல்லப்படும் நிலையில் அதற்கு முன்பே மணிரத்னம் படத்தில் த்ரிஷா ஒரு படத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’ஆயுத எழுத்து’ படத்தில் த்ரிஷா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதன் பிறகு 18 ஆண்டுகளுக்கு கழித்து மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னின் செல்வன்’ மற்றும் ’பொன்னியின் செல்வன் 2’ ஆகிய இரண்டு படங்களிலும் த்ரிஷா நடித்திருந்தார்.
இந்த நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் ’கமல் 234’ படத்தின் நாயகி த்ரிஷா தான் என்று கூறப்படுகிறது ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இன்னும் ஒரு வருடம் ஆகும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் இந்த படத்துக்கு முன்பே மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் த்ரிஷா முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே நடிகை த்ரிஷா, விஜய் நடித்துள்ள ’லியோ’ திரைப்படத்தில் நடித்த நிலையில் அஜித் நடிக்க இருக்கும் ‘விடாமுயற்சி’ என்ற படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி அவர் நடித்து முடித்துள்ள ‘தி ரோடு’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
8 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Nov 2025