J.A. George / 2023 ஜூலை 11 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழில் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ விஜய் நடித்த ’மாஸ்டர்’ மற்றும் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி ஏற்கெனவே தெலுங்கில் ’உப்பெனா’ என்ற படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் தெலுங்கு திரையுலகில் மீண்டும் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும் நீண்ட இடைவேளைக்கு பின்னர் அவர் தெலுங்கில் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
’உப்பெனா’ படத்தை இயக்கிய புச்சிபாபு சனா இந்த படத்தை இயக்க இருப்பதாகவும், இந்த படத்தில் விஜய் சேதுபதி மீண்டும் வில்லன் படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago