Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஏப்ரல் 28 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கார்த்திக் மற்றும் ரேவதி நடித்த ’கிழக்கு வாசல்’ என்ற திரைப்படம் கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியானதுடன், இந்த படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் இசையில் உருவான ’பச்சைமலை பூவு’ என்ற பாடல் 35 ஆண்டுகள் ஆன பின்னரும், மக்களின் மனதை கவர்ந்து வருகின்றது.
இந்த நிலையில், நடிகை ரம்யா பாண்டியன், இந்த பாடலுக்கு தோன்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவில், இந்த பாடலும், ரேவதி மற்றும் கார்த்திக் ஆகியோரும், இந்த வீடியோவுக்கு தூண்டுதலாக இருந்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ’இந்த பாடலை நான் எப்போதும் நேசித்து வருவேன். காரணமே இல்லாமல், இந்த பாட்டை கேட்கும் போதெல்லாம் என் உள்ளத்தில் நெகிழ வைக்கும் ஒரு அமைதியான உணர்வு ஏற்படும். இந்த அழகான கனவுகளை உயிர்ப்பிக்க உதவிய எனது குழுவினருக்கு மனமார்ந்த நன்றி,’ என்று பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவுக்கு, அச்சு அசல் ரேவதி மாதிரியே இருக்கிறீர்கள்’ என்று ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
2 hours ago