2024 மே 18, சனிக்கிழமை

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது

Freelancer   / 2024 மே 10 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது.

இந்த விருதுகளுக்கு, மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி எனப் பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்கள் பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அந்த வகையில் 2024ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 22ஆம் திகதி, நடந்த நிகழ்வில், 3 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 55 பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் இன்று (09) பத்ம விருதுகள் நிகழ்ச்சி, டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இதில் பத்ம விருதுகளை ஜனாதிபதி திரௌபதி முர்மு, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கினார்.

அப்போது விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. அவர் சார்பில் பிரேமலதா விஜயகாந்த் விருதினை பெற்றுக்கொண்டார்.S

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .