George / 2016 ஜூன் 20 , மு.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படம் வடசென்னை. இந்தத் திரைப்படத்துக்காக சென்னையில் சிறைச்சாலை செட் போட்டுள்ளார் இயக்குநர்.
வடசென்னை திரைப்படத்தின் படப்பிடிப்பை இம்மாத இறுதியில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதால் அதற்காக ஏற்பாடுகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றார்.
ஏற்கெனவே தனுஷ் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விசாரணை திரைப்படத்தில் சிறைச்சாலை காட்சிகள் மட்டுமே நிறைந்திருக்கும். இந்நிலையில் வடசென்னை திரைப்படத்துக்கும் சிறைச்சாலை செட் அமைக்கப்பட்டுள்ளமை எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, இந்தத் திரைப்படத்தில் இயக்குநர் சமுத்திரகனி முக்கியமான வேடத்தில் நடிக்கவுள்ளார். இயக்குநர் வெற்றிமாறன், வடசென்னை திரைப்படத்தில் நடிக்க தன்னை அழைத்ததாகவும் கைவசமுள்ள திரைப்படங்களை முடித்தவுடன் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் சமுத்திரகனி கூறியுள்ளார்.
விசாரணை திரைப்படம் தேசிய விருதுகளை வென்றுள்ள நிலையில் வடசென்னை திரைப்படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago