Freelancer / 2023 நவம்பர் 28 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரேயா சரண்,(Shriya Saran) தமிழ் சினிமா ரசிகர்களை அழகால் கிறங்கடித்தவர் இவர், இசுதாம் என்ற தெலுங்கு படம் ஒன்றில், 2001 ம் ஆண்டில் சினிமாவில் அறிமுகமானார்.

அடுத்து, 2002ம் ஆண்டில் வெளிவந்த சந்தோசம் என்ற தெலுங்கு படம், மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ரசிகர்கள் மத்தியில், ஸ்ரேயா பிரபலமானார். அடுத்து, தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். அடுத்தடுத்து அவருக்கு பாலிவுட், கோலிவுட் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.
எனக்கு 20 உனக்கு 18 என்ற படம் மூலம் தமிழில் ஸ்ரேயா அறிமுகமானார். 2007ம் ஆண்டில் டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்து, தமிழில் நல்ல வரவேற்பை பெற்றார்.தற்போது, 40 வயது ஆகிறது.

எனினும் ஸ்ரேயா அழகான நடிகையாகவே இன்னும் இருந்து வருகிறார்.ஸ்ரேயா நடிகையாக மட்டுமின்றி, மாடலிங் துறையிலும் தனது திறமையை காட்டி வருகிறார். இவரது கணவர் பெயர் ஆன்ட்ரி கொஸ்சீவ். இவர் ஒரு டென்னிஸ் வீரர். இவர்களு்ககு ராதா என்ற மகள் இருக்கிறார்.

பட வாய்ப்புகள் இல்லாத போதும், ரசிகர்களை சந்திக்க, அவர்களை குஷிப்படுத்த, அவர்களிடம் தங்களது கிளாமரை வெளிப்படுத்த, சோஷியல் மீடியா மிக நன்றாக உதவுகிறது. அதனால், தொடர்ந்து தனது கவர்ச்சி படங்களை பதிவிட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் ஸ்ரேயா. ‘வயது 40 ஆகியும் இன்னும் அப்படியே இருக்கீங்களே,’ என, பலரும் கமெண்டுக்களை பதிவிடுகின்றனர். M


8 hours ago
05 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Mar 2026