Editorial / 2025 செப்டெம்பர் 26 , பி.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னிந்திய சினிமா தாண்டி இந்தி பட உலகிலும் கலக்கி வருகிறார், நடிகை தமன்னா. நடிப்பை தாண்டியும் தமன்னாவின் நடனம் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பேசப்படுகிறது.
குறிப்பாக ‘ஜெயிலர்' படத்தில் ‘காவாலா...' பாடலிலும், இந்தியில் ‘ஸ்திரி-2' படத்தில் ‘ஆஜ் கி ராத்...' பாடலிலும் அவர் போட்ட ஆட்டம் ‘அப்பப்பா...' என்று எண்ணத் தோன்றும். இதற்கிடையில் தனது நடனம் குறித்து தமன்னா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கருத்துகள் வைரலாகி இருக்கிறது. அதில், ‘‘நான் எல்லா மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறேன். ஆனால், கடினமான நடன அசைவுகளை முயற்சிக்க என்னை தூண்டியது அல்லு அர்ஜுன்தான். அவருடன் ‘பத்ரிநாத்' படத்தில் நடித்த பிறகு, நிறைய படங்களில் நடனமாட வாய்ப்புகள் கிடைத்தன.படங்களில் சிறப்பு பாடல்களாலும், வளைவு நெளிவான அசைவுகளும் தான் என்னை பெரியளவில் பிரபலப்படுத்தியது'', என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
01 Dec 2025
01 Dec 2025
01 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
01 Dec 2025
01 Dec 2025
01 Dec 2025