Freelancer / 2025 ஜூலை 12 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் நயன்தாரா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் விக்னேஷ் இவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு உயிர், உலக் என இரு குழந்தைகள் இருக்கும் நிலையில், விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் விவாகரத்து செய்யப் போவதாக கடந்த சில தினங்களாகவே செய்தி பரவி வருகிறது.
இந்த நிலையில் தானும் விக்னேஷ் சிவன் பிரிய போவதாக வெளியான செய்திகளுக்கு நயன்தாராவே மறைமுகமாக பதில் அளித்துள்ளார்.
விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
புல் வெளியில் விக்னேஷ் சிவன் மேல் நயன்தாரா அமர்ந்திருப்பது போலவும், இருவரும் தூரத்தில் ஏதோ ஒன்றை ஆச்சரியத்துடன் பார்ப்பது போல அந்த புகைப்படம் இருக்கிறது.
அதில் "எங்களை குறித்து வதந்திகளை பார்க்கும்போது எங்கள் ரியாக்சன்" என பதிவிட்டு இருக்கிறார். இதன் மூலம் தங்களிடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை தாங்கள் பிரியப் போவதும் இல்லை என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நயன்தாரா. R
2 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago