R.Tharaniya / 2025 செப்டெம்பர் 03 , பி.ப. 03:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெற்காசிய குறும்பட விழாவில் சத்யஜித்ரே வெண்கல விருதினை வென்றுள்ளது இலங்கையின் ஆவணப்படம்.
நவீன மற்றும் சமகாலக்கலைக்கான இலங்கை அருங்காட்சியகத்தின் கடந்த கண்காட்சியான ‘முழுநிலஅமைப்பு’ ற்காக நியமிக்கப்பட்ட அனோமாராஜ கருணாவின் (பி. 1965) ‘No More Land’ (2024) ஆவணப்படம் ஆனது இந்தியாவின் கொல்கத்தா நகரில் இடம்பெற்ற 8 வது தெற்காசிய குறும்பட விழாவில் (SASFF) சத்யஜித்ரே வெண்கல விருதினை வென்றுள்ளது என்பதை அறிவிப்பதில் MMCA இலங்கை பெருமை கொள்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் செயற்படும் SEDR செயற்திட்டத்துடன் இணைந்து பணியாற்றும் ‘Arts 4 ADR’ன்ஒரு பகுதியாக MMCA இலங்கையால் நியமிக்கப்பட்ட மூன்று கலைப்படைப்புகளில் ஒன்று ‘No More Land’ (2024) ஆகும்.
இலங்கையில் சுதந்திரத்திற்குப் பிந்தைய முதலாவது மீள்குடியேற்ற மற்றும் விவசாய அபிவிருத்தித்திட்டமான கல்ஓயா செயற்திட்டத்தினைச் சூழவுள்ள விவசாயக்காணிப் பிணக்குகள் குறித்த நீண்ட காலப் பிரச்சினைகள் பற்றிப் பேசுகிறது ‘No More Land’ (2024).
அபிவிருத்தியின் ஒரு மைல் கல்லாக இச் செயற்திட்டம் கருதப்படும் அதே வேளையில், இந்தத் திட்டமனது பரவலான இடப்பெயர்ச்சி, சொத்திழப்பு என்பவற்றுடன் அதிகளவில் இனங்களுக்கிடையிலான பதட்டம் அதிகரிக்கவும் காரணமாக அமைந்தது.
‘No More Land’ (2024) வேறுபட்டு நிற்கக் காரணம் இக்கதையைச் சொல்ல பெண்களின் குரல்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது ஆகும். இச்செயற்திட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட அம்பாறையில் வாழும் வெவ்வேறு இனப்பின்னணியைக் கொண்ட பதினொரு பெண்களின் சாட்சியங்களை ராஜகருணா முன்னெடுத்துச் செல்கிறார்.






9 minute ago
25 minute ago
35 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
25 minute ago
35 minute ago
44 minute ago