Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
George / 2016 ஜூன் 08 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
'கண்ணா லட்டு தின்ன ஆசையா' திரைப்படத்தின் மூலம் அதிகம் அறியப்பட்டவர் விசாகா சிங். தொடர்ந்து சிறப்புத் தோற்றத்தில் 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' திரைப்படத்திலும், 'வாலிப ராஜா' திரைப்படத்திலும் நடித்தார்.
'கண்ணா லட்டு தின்ன ஆசையா' பெரிய வெற்றியைப் பெற்றாலும் தொடர்ந்து பெரிதாக எந்த வாய்ப்புகளும் விசாகாவுக்கு வரவில்லை.
தற்போது விசாகா சிங் பற்றிய காதல் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அவருக்கும் விக்ராந்த் ராவ் என்பவருக்கும் காதல் என்றும், விக்ராந்தின் பிறந்த நாளுக்கு அவருடைய பிறந்த நாள் வாழ்த்தில் கூட தங்களது காதலைப் பற்றி விசாகா அழுத்தமாக குறிப்பிட்டிருந்தார் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது பற்றி மேலும் விசாரித்த போது, அவர்கள் இருவரும் தற்போது காதலித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் எப்படியும் அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் சொல்கிறார்கள். ஹீரோயின்களுக்கு வாய்ப்புகள் குறையும் போது வேறு என்னதான் செய்ய முடியும். திருமணம் ஒன்றுதான் அவர்களுக்குத் திருப்புமுனையைத் தரும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
3 hours ago
3 hours ago