George / 2016 செப்டெம்பர் 05 , பி.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஒரு வழியாக 5 மாத காலமாக விஜய் - அஜீத் ரசிகர்கள் எந்த சண்டையும் இல்லாமல் சமூக வலைத்தளங்கள் அமைதியாக இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அவர்களது சண்டை ஆரம்பமாகிவிட்டது.
விஜய் திரைப்படத்தின் தலைப்பை அறிவித்துவிட்டார்கள் அல்லவா, கேட்கவா வேண்டும். பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் திரைப்படத்தின் தலைப்பு 'பைரவா' என்பதை அதிகாரப்பூர்வமாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்கள்.
அவ்வளவுதான் ஐந்து மாத காலமாக மறந்து போயிருந்த சண்டையை விஜய் ரசிகர்களும், அஜீத் ரசிகர்களும் ஆரம்பித்துவிட்டார்கள்.
'பைரவா' என்ற தலைப்பை சமூக வலைத்தளங்களில் டிரென்டிங்கில் விட்டார்கள் விஜய் ரசிகர்கள். அஜீத் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா, 'பைரவா'வைப் பிரித்து 'பை ரவா' (Buy Rava) அதாவது சமையலுக்கும், உப்புமாவுக்கும் பயன்படுத்தும் 'ரவையை வாங்கி வா' என்ற அர்த்தத்தில் 'Buy Rava' என்பதை ஏட்டிக்குப் போட்டியாக டிரென்டிங்கில் விட்டார்கள்.
அது மட்டுமா 'பைரவா'வைக் கிண்டலடிக்கும் விதவிதமான மீம்ஸ்களையும், ஜோக்குகளையும் உருவாக்கி பரவ வைத்தார்கள். அதில் சில வைரலாகப் பரவின.
திரைப்படங்களுக்கு நகைச்சுவைப் பஞ்சம் இருக்கிறது என்று நினைப்பவர்கள் இப்படி மீம்ஸ்களை உருவாக்குபவர்களைப் பிடித்தாலே போதும் புதுப்புது நகைச்சுவை கிடைத்துவிடும். இன்னும் சில நாட்களுக்கு 'பைரவா' மீம்ஸ்களின் பரவல் அதிகமாகவே இருக்கும்.
4 minute ago
12 minute ago
14 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
12 minute ago
14 minute ago
19 minute ago