George / 2016 ஜூலை 28 , மு.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

சத்யா 2 என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை அனைகா. அந்த திரைப்படத்தில் எங்கேயும் எப்போதும் சர்வானந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார் அனைகா. பின்னர் அந்த திரைப்படம் தமிழில் நான்தான்டா என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.
அதையடுத்து, சித்தார்த் நடித்த காவியத்தலைவன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். தற்போது அதர்வா நடித்து வரும் செம போதை ஆகாத என்ற திரைப்படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார்.
குடி போதையினால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு கதையில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில், விலைமாது வேடத்தில் நடித்திருக்கிறாராம் அனைகா. இந்த வேடத்தில் நடிக்கத் தேர்வு நடந்தபோது பல நடிகைகள் கலந்து கொண்டார்களாம்.
அவர்களில் விலைமாதுவுக்கான உடல்மொழி, அனைகாவுக்குத்தான் பொருந்தியதாம். அதனால் அவரை முக்கியத்துவம் வாய்ந்த அந்த வேடத்தில் நடிக்க வைத்துள்ளாராம் இயக்குநர் பத்ரி.
அந்த வகையில், குடிபோதையில் அதர்வா விலைமாதுவிடம் செல்லும் சில படுக்கையறை காட்சிகளும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago