2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

வனிதாவுக்கு 4ஆவது திருமணமா ?

Freelancer   / 2021 ஜூலை 21 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற இவர், கடந்த வருடம் கொரோனா ஊரடங்கு நேரத்தில் பீட்டர் போல் என்பவரை 3ஆவது திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கினார்.

பின்னர் சில தினங்களிலேயே அவரை குடிகாரர் என்று உதறித் தள்ளி மேலும் பரபரப்பு ஏற்படுத்தினார். இதையடுத்து, 'பிக் பாஸ் ஜோடிகள்' நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிலிருந்து பாதியிலேயே விலகினார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் வனிதாவின் எதிர்காலத்தை கணித்த ஜோதிடர், வனிதா மீண்டும் திருமணம் செய்து கொள்வார் என்றும், அவரது வருங்கால கணவரின் பெயர் ’எஸ்’என்ற ஆங்கில எழுத்தில் ஆரம்பிக்கும் என்றும் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது. 

மேலும் அரசியலில் நுழைந்தால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போல வனிதாவாலும் வெற்றி பெற முடியும் எனவும் அந்த கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .