2023 ஒக்டோபர் 03, செவ்வாய்க்கிழமை

சூரிக்கு நன்றி இல்லை: பிரபல நடிகர் தூற்றினார்

Freelancer   / 2023 ஏப்ரல் 03 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி. விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக தடம் பதித்துள்ளார். விடுதலை படத்தில் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் சூரி என பலரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக அவர் எடுத்துள்ள ரிஸ்க்கை பார்த்து முன்னணி நடிகர்களே பிரமித்து போயுள்ளனர்.

இந்நிலையில் நடிகர் சூரியை திட்டி தீர்த்துள்ளார்  நடிகர் போண்டா மணி . சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் போண்டா மணிக்கு மருத்துவ சிகிச்சைக்காக உதவி செய்யுமாறு சக நடிகர்கள் கண்ணீர்மல்க வீடியோ வெளியிட்டனர். இதையடுத்து நடிகர் போண்டாமணிக்கு சினிமா பிரபலங்கள் பலரும் உதவிக்கரம் நீட்டி வந்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் முதற்கட்டமாக ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து உதவி செய்துள்ளதாக தெரிவித்த நடிகர்  போண்டா மணி நடிகர் சூரி  தனக்கு உதவி செய்யவில்லை என ஆதங்கப்பட்டுள்ளார்.

மேலும் தாங்கள் 55 வாரம் செய்த காமெடி தொடரில் நடித்து வரும் போது  , நடிகர் சூரியை தினமும் அழைத்து வருவார் என்றும் அப்போது அவருக்கு தினமும் 200 ரூபாய் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார் போண்டா மணி. அப்போதெல்லாம் சூரி தன்னுடைய வீட்டில்தான் தங்கியிருப்பார் என்றும் தன்னுடைய வீட்டில்தான் சாப்பிடுவார் என்றும் கூறியுள்ள போண்டா மணி, ஜெயித்த பிறகு சூரி தன்னை கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .