2021 டிசெம்பர் 04, சனிக்கிழமை

பழம்பெரும் தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்

Freelancer   / 2021 ஒக்டோபர் 12 , பி.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த், உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று (12) காலமானார். 

1965ஆம் ஆண்டில் இயக்குனர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகமாகி மருத்துவர் வேடத்தில் நடித்த ஸ்ரீகாந்தின் நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது. 

சிவாஜி, கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகருடன் இணைந்து நடித்த அவர், எம்.ஜி.ஆருடன் இணைந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை. 

200 படங்களுக்கு மேல் நடித்துள்ள ஸ்ரீகாந்த், சுமார் 50 படங்களில் கதாநாயகனாகவும் ஏனையவற்றில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களிலும் சிறப்பாக நடித்து பெயர் பெற்றார்.   

அவரது மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X