Janu / 2023 மே 29 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

இயக்குனர் ராம் இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான 'கற்றதுதமிழ்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி. இவர்நடித்த அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப்பெற்றன.
தொடர்ந்து கலகலப்பு, மங்காத்தா, ரெட்டசுழி, தூங்காநகரம், அரவான், சேட்டை, சகலகலாவல்லவன் , மாப்ளசிங்கம், இறைவி உள்ளிட்ட பல்வேறு படங்களில் அஞ்சலி நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இதுவரை 49 படங்களில் நடித்து முடித்துள்ள அஞ்சலி தற்போது 50-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்நிலையில் அஞ்சலி நடிக்கும் 50 வது படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட்லுக்போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 'ஈகை' என்று பெயரிடப்பட்டுள்ள அசோக் வேலாயுதம் இயக்கும் இந்தபடத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார். தரண்குமார் இசையமைக்கிறார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago